விளாத்திகுளத்தில் 100 நாள் வேலை கேட்டு பெண்கள், விவசாய தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விருசம்பட்டி ஊராட்சி மாமுநயினார்புரம் கிராமத்தில் 150 க்கு மேற்பட்ட மக்கள் நூறுநாள் வேலைக்கான பயனாளர் அட்டை வைத்துள்ளனர். அவர்களுக்கு கடந்த ஒரு மாதமாக ஊராட்சி நிர்வாகம் வேலை வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளது, இதை கண்டித்து மாமுநயினார்புரம் கிராமத்தில் உள்ள 100 நாள் வேலை பார்க்கும் விவசாய தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்கக்கோரியும், அனைவருக்கும் பகுதி பகுதியாக வாரத்திற்கு பத்துப்பேர் என்ற வகையில் வேலை வழங்காமல் ஒரே நேரத்தில் அனைவருக்கும் வேலை வழங்க கோரியும், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கு. ரவீந்திரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஜோதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புவி ராஜ், ஒன்றிய தலைவர் ராமலிங்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாமுநயினார்புரம் கிளைச் செயலாளர் அமுதா உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தின் போது பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஒரு வாரத்தில் மாமுநயினார்புரம் கிராம மக்களுக்கு முழுமையாக வேலை வழங்குவதாக உறுதியளித்தார் அதன் அடிப்படையில் முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
---------------------------------------------------------------
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள...
WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE
WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE