தூத்துக்குடி ஸ்பிக் நகர் பகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம்!
தூத்துக்குடி ஸ்பிக் நகர் பகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம்!

தூத்துக்குடி மாநகர ஸ்பிக் நகர் பகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருச்செந்தூர் சாலை 58-வது வார்டு பகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கு பகுதி செயலாளரும், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய துணைச் சேர்மனுமான ஆஸ்கர் தலைமை வகித்தார். அவைத்தலைவர் வெள்ளபாண்டி, துணைச் செயலாளர்கள் அந்தோணி குரூஸ், கல்பனா, மாவட்ட பிரதிநிதிகள் அந்தோணி ராஜ், ஆதி ஆனந்த், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ரகு வரவேற்றார். கூட்டத்தில் வட்டச் செயலாளர்கள் வசந்தி, சுப்பிரமணியன், மைக்கேல், கருப்பசாமி, முன்னாள் கவுன்சிலர் ஸ்பிக் நகர் ஜெயக்குமார், பகுதி இளைஞரணி அருண், வேல்மயில், சுபாஷ் ஞானதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பகுதி கழகம் சார்பாக தேர்தல் பணிகள் மேற்கொள்வது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.