இலவச வீட்டுமனைப்பட்டாக்களுக்கு கணினி பட்டா வழங்க கோரி பொதுமக்கள் மனு!
முத்தையாபுரம் அருகே 1992ம் ஆண்டு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப்பட்டாக்களுக்கு கணினி பட்டா வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
முத்தையாபுரம் அருகே பொதுமக்களுக்கு 1992ம் ஆண்டு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப்பட்டாக்களுக்கு கணினி பட்டா வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் சிபிஎம் தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி வட்டம், முள்ளக்காடு 1 வருவாய்கிராமம் முத்தையாபுரம் பகுதி முனியசாமி கோயில் தெருவில் புல எண் 310,309ல் சுமார் நூறு குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் பகுதி மக்கள் உப்பளம் உள்ளிட்ட கூலி வேலைகள் செய்து வரும் மக்களாவார்கள். இப்பகுதி மக்களின் வாழ்நிலையை கண்க்கில் கொண்டு 1992ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டாவும் மனையில் தொகுப்பு வீடுகளும் வழங்கப்பட்டது. இந்த குடியிருப்புகளுக்கான வீடடுத்தீர்வை, மின் இணைப்புகள் பெறப்பட்டு பயன்படுத்தபட்டு வருகிறது.
மேற்கண்ட புல எண்ணில் வழஙகப்படட இலவச பட்டாக்கள் தூத்துக்குடி வட்டாச்சியர் அலுவலக புலப்படங்கள் உள்ளிட்ட உரிய ஆவணங்களில் உரிய பதிவேற்றம் செய்யாமல் கணிணி பட்டா பெறமுடியாமல் உள்ளது. இதனால் தாய், தந்தை பெயரில் உள்ள நிலங்களை பிள்ளைகளின் பெயரில் மாற்ற முடியாமலும், சிலர் பட்டா பெயர் உள்ள சிலர் இறந்து விட்டார்கள் அவர்களின் வாரிசு தாரர் பெயரில் மாற்ற முடியவில்லை. 1992ம் ஆண்டு 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களில் தற்போது 250 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள்.இந்த மக்கள் பயன்பெறும் வகையில் தற்போது குடியிருந்து வருபவர்களின் பெயரில் கணிணி பட்டா வழங்குவதற்க்கு உரிய நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.
இதில் சிபிஎம் புறநகர் செயலாளர் பா.ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.பேச்சிமுத்து, மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.