ரேஷன் கடைகளில் சின்ன வெங்காயம், தக்காளி வழங்க கோரிக்கை!
சின்ன வெங்காயம், தக்காளி ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு வழங்க கோரி ஆட்சியரகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

சின்ன வெங்காயம், தக்காளி ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு வழங்க கோரி ஆட்சியரகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து தக்காளி, சின்ன வெங்காயம் விலை ஒரு கிலோ 150க்கும், 200க்கும் விற்கப்படுகிறது. விண்ணை முட்டும் விலை உயர்வு காரணமாக ஏழை, எளிய, சாதாரண மக்கள் வாங்க முடியாத சூழ நிலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே போர்க்கால அடிப்படையில் சின்ன வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறி பொருட்கள் அனைத்து ரேஷன் கடையிலும் குறைந்த விலைக்கு கொடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில் அனைத்திந்திய ஜனநாயகம் மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், மாவட்ட துணைத் தலைவர் கமலா, மாநில குழு உறுப்பினர் இனிதா, மாவட்ட குழு உறுப்பினர் சரஸ்வதி, மாநகர் குழு தலைவரும், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் முத்துமாரி, மாதர் சங்கம் மாநகரக்குழு உறுப்பினர்கள் மாரியம்மாள், கோகிலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.