தூத்துக்குடியில் 25 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் 10 நாட்களில் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி...!

தூத்துக்குடியில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டு 10 நாட்களில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது இதை பார்த்து பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

தூத்துக்குடியில் 25 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் 10 நாட்களில் விரிசல்  ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி...!

தூத்துக்குடியில் புதிதாக திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விரிசல் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர் மற்றும் அரசு அதற்கு துணை போன அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகர குழு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூலை 3 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் தலா ரூ.25 இலட்சம் செலவில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அத்திமரப்பட்டி, கால்டுவெல் காலனி, சில்வர்புரம் மற்றும் பண்டாரம்பட்டி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களையும், கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட ஊரணித் தெரு, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களும், காயல்பட்டினம் நகராட்சிகுட்பட்ட பண்டகசாலை பகுதியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையமும், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், சிவஞானபுரம் ஊராட்சியில் ரூ.120 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை காணொளிக் காட்சி வாயிலாகத் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிலையில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கால்டுவெல் காலனி பகுதியில் திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரக்கூடிய பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான நிலை உள்ளது. 

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகரச் செயலாளர் எம் எஸ் முத்து கூறுகையில் 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் தூத்துக்குடி கால்டுவெல் காலனி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஜூலை மூன்றாம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

 

இந்நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டிடம் மோசமான நிலையில் உள்ளது பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ சேவைக்காக தினசரி வந்து செல்லக்கூடிய பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். எனவே தரமற்ற கட்டிடத்தை கட்டிய மேற்படி ஒப்பந்ததாரர் மற்றும் அதற்கு துணை போன அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அதேபோல் மேற்படி ஒப்பந்ததாரர் மூலம் நடைபெற்ற அனைத்து அரசு கட்டிடங்களையும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.