தூத்துக்குடியில் தெருவில் ஆதரவின்றி நின்று கொண்டிருந்த 1½ வயது குழந்தை மீட்பு : பெற்றோரிடம் ஒப்படைப்பு!

தூத்துக்குடியில் தெருவில் ஆதரவின்றி நின்று கொண்டிருந்த 1½ வயது குழந்தையை மீட்டு பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

தூத்துக்குடி டூவிபுரம் 2வது தெருவில் உள்ள ஒரு பல் மருத்துவமனை அருகே சுமார் 1½ வயது குழந்தை ஆதரவின்றி தெருவில் நிற்பதாக மத்தியபாகம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி உடனடியாக மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் உத்தரவின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலர் திரு. சுப்பிரமணியன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்து மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு ஆதரவின்றி நின்று கொண்டிருந்த குழந்தையை மீட்டு, அந்த குழந்தை யார் என விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அந்த குழந்தை தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முருகையா என்பவரது 1½ வயது பெண் குழந்தை என்பது தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி போலீசார் உடனடியாக நேரில் சென்று குழந்தையை பெற்றோர்களது வீட்டருகே வைத்து குழந்தையின் தாய் மற்றும் குழந்தையின் பாட்டியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். குழந்தையை மீட்டு பத்திரமாக அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.