மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்..!

மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்..!

தூத்துக்குடி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதற்கும் திட்டத்திற்கான நிதியினை வெகுவாக குறைத்துள்ள மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் 

மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தின் பெயரை மாற்றி அமைத்துள்ளது மேலும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் நிதியை 40% குறைத்துள்ளது மேலும் இந்த திட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மேலும் இந்த திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வந்த கண்காணிப்பாளர் பதவி உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தவர்கள் வேலை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது மேலும் இதன் காரணமாக இந்த புதிய திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் 

இந்த நிலையில் தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதற்கும் திட்டத்திற்கான நிதியை குறைத்ததை கண்டித்தும் மத்திய அரசு இந்த புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மகேந்திர பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்