திமுக தான் பாஜக வின் கள்ளக்கூட்டனி, நாங்கள் என்றுமே மக்களுடன் தான் கூட்டணி : தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

திமுக தான் பாஜக வின் கள்ளக்கூட்டனி, நாங்கள் என்றுமே மக்களுடன் தான் கூட்டணி : தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

நாங்கள் நினைத்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து அமைத்து ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும். ஆனால் அதை செய்யவில்லை. நாங்கள் என்றுமே மக்களுடன் தான் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். 

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தைத் திருச்சியில் தொடங்கினார். அந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக தலையிலான கூட்டணியில் உள்ள 40 வேட்பாளர்களையும், ஒரே மேடையில் ஆதரித்து ஈபிஎஸ் பிரச்சாரம் செய்தார். அதன் தொடர்ச்சியாகத் தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  இன்று மாலை பிரசாரம் செய்தார்.

இதற்காக விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே உள்ள மைதானத்தில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்துள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து பிரச்சாரக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கள்ளக்கூட்டணி வைத்ததாக பேசுகிறீர்களே அதற்கான ஆதாரம் உள்ளதா?. 

திமுகவுடன்  பாரதிய ஜனதா கள்ளக்கூட்டணி வைத்தற்கான ஆதாரத்தை வாக்களப் பெருமக்களாகிய உங்களிடம் காட்டுகிறேன் என்று புகைப்படத்தை காட்டினார். பிரதமர் தமிழகம் வந்தபோது, முதல்வராக இருந்த நான் பல் இளித்தேன் என்கிறார் உதயநிதி. நீ என்ன பண்ணிட்டு இருக்க? நீயும் அதேதான பண்ணிட்டு இருக்க? நீ சிரிச்சா சரி, நான் சிரிச்சா தப்பா? என்று கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கோ பேக் மோடி என்று தமிழகம் முழுவதும் விளம்பர போர்டுகளை வைத்து எதிர்ப்பை காற்றினீர்களே? ஆனால் இன்று வெல்கம் மோடி என்று கூறுகிறீர்களே. 

நாங்கள் நினைத்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து அமைத்து ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும். ஆனால் அதை செய்யவில்லை. நாங்கள் என்றுமே மக்களுடன் தான் கூட்டணி. பதவி ஆசை எங்களுக்கு எப்போதுமே கிடையாது. தூத்துக்குடி வெள்ளப்பாதிப்பின்போது அவர்களுக்கு வேண்டிய உதவிகளை உடனடியாக செய்து கொடுத்தது அதிமுக தான். ஏற்கனவே மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தும் அதனை கண்டு கொள்ளாமல் இருந்தார்கள்." இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.