தூத்துக்குடியில் ஓற்றுமைக்கான ஓட்டம் : மாணவ, மாணவிகள் பங்கேற்பு!

தூத்துக்குடியில் ஓற்றுமைக்கான ஓட்டம் : மாணவ, மாணவிகள் பங்கேற்பு!

தூத்துக்குடியில் சர்தார் வல்லபாய் படேலின் 148வது பிறந்த நாளை முன்னிட்டு ஓற்றுமைக்கான ஒட்டப்பந்தயம் நடைபெற்றது.

சர்தார் வல்லபாய் படேலின் 148வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் சார்பில் மாணவ மாணவிகளுக்கான  ‘ஓற்றுமைக்கான ஓட்டம்’ என்ற பெயரில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நடத்தியது. 

இதில் பல்கலைகழகத்திலுள்ள உறுப்புக் கல்லூரிகளிலிருந்து மொத்தம் 100 மாணவர்கள் மற்றும் 100 மாணவிகள் பங்கு பெற்றனர். இப்போட்டியை இக்கல்லூரியின் முதல்வர் ப. அகிலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கான 10 கி.மீ ஓட்டப்பந்தயம் புதுக்கோட்டை பேருந்து நிறுத்ததிலிருந்தும் மாணவிகளுக்கான 5 கி.மீ ஓட்டப்பந்தயம் மறவன்மடம் பேருந்து நிறுத்ததிலிருந்து தொடங்கி மீன்வளக்கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில நிறைவுற்றது. 

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட ஊரக பிரிவு இணைக் காவல்துறை இந்த நிகழ்ச்சியின் இறுதியாக, அனைத்து ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் தேசீய ஒற்றுமைக்கான நாளுக்கான உறுதிமொழியை எடுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை திரு.முருகானந்தம், நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் செய்தார்.