தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வு கண்காணிப்பு குழு கலைப்பு! புதிய உறுப்பினர்களுக்கு அழைப்பு – ஜூன் 15க்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வு கண்காணிப்பு குழு கலைப்பு! புதிய உறுப்பினர்களுக்கு அழைப்பு – ஜூன் 15க்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவானது 14.06.2017 அன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

மேற்படி குழுவானது மூன்று வருடத்திற்குள் கலைக்கப்பட வேண்டும். எனவே நடைமுறையில் உள்ள தூய்மை பணியாளர்கள் மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவானது தற்போது கலைக்கப்படுகிறது.

புதிய குழுவிற்கான உறுப்பினர்கள் கீழ்கண்டவாறு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

1. மாவட்ட ஆட்சியர் தலைவர்

2. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செயல் உறுப்பினர்

3. மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்

(பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் அல்லது மாநில அரசால் பரிந்துரை செய்யப்படும் தூத்துக்குடி மாவட்டத்தினைச் சேர்ந்த இரண்டுக்கும் மிகாத நபர்கள்)  உறுப்பினர்

4. காவல் கண்காணிப்பாளர் உறுப்பினர்

5. உதவி இயக்குநர், பேரூராட்சிகள் உறுப்பினர்

6 அனைத்து மாநகராட்சி ஆணையர் / மாநகராட்சி ஆணையர்கள்/மண்டல அளவிலான  உறுப்பினர்

7 மாவட்டத்தில் இரயில்வே துறையினைச் சேர்ந்த ஒரு பொறுப்பாளர் கெஜட் அதிகாரிகள் உறுப்பினர்

8 அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்கள்

மனித கழிவுகளை அகற்றும் தொழில் செய்வதை தடுத்தல் மற்றும் மறுவாழ்விற்காக பணி மேற்கொள்ள முன்வரும் எண்ணிக்கையில் 4 பேருக்கு மேற்படாத சமூக ஆர்வலர்கள் (மாவட்ட ஆட்சியரால் முடிவு செய்யப்பட்டவர்கள்)  உறுப்பினர்

9 மாவட்ட அளவிலான வங்கி குழுவின் ஒரு பொறுப்பாளர் உறுப்பினர்

எனவே, தகுதி வாய்ந்த நபர்கள் தூத்துக்குடி மாவட்ட தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினராக வருகின்ற 15.06.2026 –க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.