தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன் கைது : எப்போதும் வென்றான் அருகே பயங்கரம்!
தூத்துக்குடி அருகே எப்போதும் வென்றான் அருகே சோழபுரம் பகுதியில் தம்பியை கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகே எப்போதும் வென்றான் அருகே சோழபுரம் பகுதியில் தம்பியை கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகே சோழபுரம் கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் முத்துக்குட்டி (26). இவரது உடன் பிறந்த அண்ணன் பொன் மாடசாமி (30), ஆட்டுக்கறி வெட்டும் தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு முத்துக்குட்டி குடிபோதையில் தனது அண்ணன் வீட்டில் டிவி மற்றும் பொருட்களை சேதப்படுத்தினாராம். இதையறிந்த பொன்மாசாமி தம்பியை தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் முத்துக்குட்டியை அவர் மரக்கட்டையால் தாக்கியுள்ளார்.
எங்கள் வாட்ஸ் ஆப் குழுவில் இனைய... CLICK HERE
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து எப்போதும் வென்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகம்மது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவரது சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, பொன் மாடசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+++++++++++++++++++++++++++++++++++++
தூத்துக்குடி விஷன் நியூஸ் இனையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்கள் இடம்பெற..
செல்: +91 8524887507