திருச்செந்தூரில் சர்ப்பக்காவடி பறிமுதல் - ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்டும் என வனத்துறை கடும் எச்சரிக்கை

பொங்கல் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் எடுத்துவந்த சர்ப்பக் காவடியை, வனத்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூரில் சர்ப்பக்காவடி பறிமுதல் - ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்டும் என வனத்துறை கடும் எச்சரிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் எடுத்து வந்த சர்ப்பக்காவடியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சட்டத்திற்கு புறம்பாக ச‌ர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வருகின்றனர். இவ்வாறு எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் எடுத்துவந்த சர்ப்பக்காவடியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர், மேலும் இவ்வாறு பாம்புகளை கொன்டு வந்தால்  ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்டும் என வனத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.