தூத்துக்குடியில் அனுமதியின்றி செயல்பட்ட மதுபான பாருக்கு 'சீல்'!

தூத்துக்குடியில் அனுமதியின்றி செயல்பட்ட மதுபான பாருக்கு 'சீல்'!

தூத்துக்குடியில் அனுமதியின்றி செயல்பட்ட மதுபான பாருக்கு 'சீல்'!

ஏரல் பேருந்து நிலையம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட மதுபான பாருக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். 

தூத்துக்குடி மவட்டம், ஏரல் பேருந்து நிலையம் அருகில் இருந்து வாழவல்லான் ஊருக்கு செல்லும் வழியில் உள்ள வாய்க்கால் ரோட்டில் மதுபான பார் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, ஆறுமுகமங்கலம் வருவாய் ஆய்வாளர் முத்து சரவணன், ஏரல் ஆய்வாள‌ர் (பொறுப்பு) லட்சுமி பிரபா, உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் காவல் துறையினர் வியாழக்கிழமை இரவு ஆய்வு செய்தனர். இதில் அரசு அனுமதி பெறாமல் மதுபான பார் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த மதுபான பாரை பூட்டி 'சீல்' வைத்தனர்.