ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு நினைவுதினம்: சிபிஎம் சார்பில் அஞ்சலி!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் திருவுருவப் படத்திற்கு சிபிஎம் சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தபட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் திருவுருவப் படத்திற்கு சிபிஎம் சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தபட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந்தேதி நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு, தடியடியில் 15 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினம் தூத்துக்குடி மாசிலாமனிபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில் இன்று அனுசரிக்கப்பட்டது. நிகழ்வில், போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு சிபிஎம் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.அர்ச்சுணன், ஆர்.ரசல், தா.ராஜா, பூமயில், புவிராஜ், ஒன்றிய செயலாளர் சங்கரன், புறநகர் செயலாளர் பா.ராஜா, ஆழ்வை ரவிச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.முத்து, சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.