பெண் காவலருக்கு பாலியல் தொல்லை புகார்... 555 நாட்கள் விடுப்பில் இருந்த காவல் ஆய்வாளர் பணிநீக்கம்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை புகார்... 555 நாட்கள் விடுப்பில் இருந்த காவல் ஆய்வாளர் பணிநீக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன் சிங்கப்பண் அதிரடிப்படை பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது அவர் காவல் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், எவ்வித முன்னறிவிப்புமின்றி தொடர்ந்து 555 நாட்கள் விடுப்பில் இருந்ததாகவும், இதன் காரணமாகவே அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை புகார்... விசாரணைக்கு ஒத்துழைக்காத நிலை... 555 நாட்கள் விடுப்பு... இறுதியில் காவல் பணியிலிருந்து நீக்கம்!

இந்தச் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.