விளாத்திகுளத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது!!

விளாத்திகுளத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிடத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விளாத்திகுளத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது!!

விளாத்திகுளத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிடத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 9வயது சிறுமி ஒருவர் 4-ஆம் படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி இடைவேளையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக பள்ளியின் கழிவறைக்கு சிறுமி சென்றுள்ளார். அப்போது பள்ளி வளாகத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த கட்டிட தொழிலாளியான காடல்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கருமுருகன் (25), சிறுமியின் கையைப்பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

அத்துடன் செல்போனில் ஆபாச புகைப்படங்களை காட்டி சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி, அவரின் பிடியிலிருந்துதப்பி ஓடி பள்ளி தலைமை ஆசிரியையிடம் கூறியுள்ளார். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கருமுருகனை கைது செய்தனர்.