மாணவியர் விடுதியில் அத்துமீறி நுழைந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க மாதர், வாலிபர்,மாணவர் அமைப்பினர் கோரிக்கை!
மாணவியர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாதர் சங்கம், வாலிபர், மாணவர், ததீஒமு சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளித்தனர்.
மாணவியர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாதர் சங்கம், வாலிபர், மாணவர், ததீஒமு சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள அரசு உதவி பெறும் புனித ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் அதே பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். பிப்ரவரி 10ந்தேதி அதிகாலையில் விடுதி பக்கத்தில் உள்ள சுமார் 60 வயது மர்ம நபர் அத்து மீறி விடுதி சுவர் ஏறி குதித்துள்ளார். மாணவிகள் தங்கி இருக்கும் அறைக்குள் நுழைந்து ஆபாசமாக பேசி கையில் கம்பியை வைத்துக்கொண்டு கொலை செய்யும் நோக்கோடு பேசியுள்ளார் அவசர எண்100க்கு மாணவிகள் போன் செய்து காவல் துறையை வரவழைத்திருக்கிறார்கள் சம்மந்தபட்ட நபரை காவல் நிலையதிற்கு அழைத்துச் சென்று எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அனுப்பிவைத்துள்ளனர்.
இது மாணவிகள் மத்தியில் பெறும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் அரசு மற்றும் அரசு சாரா விடுதிகளில் மாணவிகள் மீதான பாலியல் கொடுமைகளும்அச்சுருத்தல்களும் பாதுகாப்பு இல்லாத போக்கும் உள்ளது. மேற்கண்ட சம்பவத்தன்று விடுதி காப்பாளர் அங்கு இல்லாதது தெரிய வருகிறது அதேபோல்அன்றுபணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறார்.இச்சம்பவத்தை கண்டித்தும் காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்விடுதிக்குள் நுழைந்த மர்மநபர் மீதுஉரிய வழக்கு பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஜனநாயக வாலிபர் சங்கம் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்கப்பட்டது.
இதில் மாதர் சங்க மாவட்ட தலைவர் த. கலைச்செல்வி, மாவட்டசெயலாளர் பி.பூமயில், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் இ.சுரேஷ், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ரா. கார்த்திக், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் வைணபெருமாள், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் இனிதா, மாநகர பொருளாளர் வெங்கடேஷ்வரி, மாணவர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கிஷோர், நிர்வாகிகள் ஷிநாத், வம்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.