தூத்துக்குடி மாநகர பகுதியில் கனரக வாகனங்கள் வந்து, செல்லும் நேரம் மாற்றம்!
தூத்துக்குடி மாநகர பகுதியில் கனரக வாகனங்கள் வந்து, செல்லும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகர பகுதியில் கனரக வாகனங்கள் வந்து, செல்லும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகர பகுதியில் கனரக வாகனங்கள் வந்து, செல்லும் நேரத்தை மாற்றியமைத்து அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாகவும், அதற்கான திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு மக்கள் அதிக நடமாட்டம் உள்ள நேரங்களில் கனரக வாகனங்கள் மாநகர பகுதிக்குள் வருவதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தூத்துக்குடி மாநகர பகுதியில் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் கனரக வாகனங்கள் தூத்துக்குடி நகர பகுதிக்குள் வந்து, செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், தூத்துக்குடி உதவி ஆட்சியர் கவுரவ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, வட்டாட்சியர் செல்வக்குமார், டவுன் டி.எஸ்.பி சத்தியராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.