நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி என்சிசி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி  என்சிசி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

 நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி என்சிசி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

லெப்டினென்ட்  கர்னல் டிஆர்டி.சின்ஹா உத்தரவின் பேரில் ஜூனியர் கமிஷன் அதிகாரி எஸ்கே. பாண்டியன் தலைமையில் CHM.சதீஷ்குமார் மற்றும் ஹவில்தார்.குருங் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் தலைமை வகித்து பயிற்சியை துவக்கி  வைத்தார்.   மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரும், தேசிய மாணவர் படையின் முன்னாள் அலுவலருமான ஜெயசீலன் சேகர் டேவிட் முன்னிலை  வகித்தார்.தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர் வரவேற்றார். திறன் மேம்பாட்டு பயிற்சியை பாக்கியவதி  வழங்கினார்.

இயற்கையான பொருட்களிலிருந்து உபயோகமான அழகு பொருட்கள், வாழ்த்து அட்டை, அலங்காரப் பொருட்கள் ஆகியவை செய்தல் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி பெற்ற என்சிசி மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை வைத்து  சிறப்பான அழகுப் பொருட்களையும், வாழ்த்து அட்டைகளையும் உடனடியாக தயாரித்து   காட்சிப்படுத்தினர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் மற்றும்  ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.  பயிற்சி பெற்ற என்சிசி மாணவர்களையும், தேசிய மாணவர் படை அலுவலரையும், கலந்து கொண்ட ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர்  சுதாகர்  பாராட்டினார்.