நிவாரணம் வழங்க கோரி ஆத்தூர் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை!

ஆத்தூர் தேர்வு நிலை பேரூராட்சி க்குட்பட்ட பகுதியில் நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தேர்வு நிலை பேரூராட்சி உள்ளது. இதில் சுமார் 15 வார்டுகள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை மற்றும் வெள்ள பெருக்கு காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.அதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, கட்சி, தொண்டு நிறுவனங்கள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்படடன.
இந்நிலையில் ஆத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 1 வது வார்டு பகுதியில் உள்ள புள்ளியடி கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என கூறி ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தையும் வார்டு கவுன்சிலரையும் முற்றுகையிட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.