தூத்துக்குடியில் கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது!!

தூத்துக்குடியில் கத்தியுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்..
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஸ்மார்ட்சிட்டி பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தில் சந்தேகத்தின் பேரில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்ததை பார்த்து அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்
மேலும் அவரை சோதனை செய்ததில் அவரது இடுப்பில் ஒரு கத்தி வைத்திருப்பதை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர், தாளமுத்து நகர் மேல அழகாபுரியைச் சேர்ந்த மணி முத்து மகன் மாரிமுத்து சூர்யா (22) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகி
ன்றனர்.