மார்ச் 1 ல் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் முகாம் - ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளது குறைகளை தீர்க்கும் விதமாக பிரதி மாதம் 2-வது செவ்வாய்கிழமை வட்டார வளர்ச்சி அளவிலும், இரு மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய்கிழமை கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) / திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்கள் முன்னிலையில் குறைகேள் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வருகிற மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இம்முகாமினை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியைச் சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் நீல நிற வேலை அட்டையினை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் ஆப் குரூப்பில் இனைய... 

https://chat.whatsapp.com/GH6dUyqDwutJ9WalcWvsDN