தூத்துக்குடியில் பலத்த காற்று : கப்பல்கள் பாதுகாப்பான பயணம் செய்ய அறிவுறுத்தல்!

தூத்துக்குடியில் பலத்த காற்று : கப்பல்கள் பாதுகாப்பான பயணம் செய்ய அறிவுறுத்தல்!

வங்கக்கடலில் புயல் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடியில் பலத்த காற்று வீசியது. இதை தொடர்ந்து கப்பல்கள் பாதுகாப்பான பாதையில் பயணம் செய்ய அறிவுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் தணிந்து மிதமான கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள ராமெல் புயல், தீவிர புயலாக மாறி உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஓரிரு இங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் முதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இந்நிலையில் நேற்று காலை முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த காற்று வீசியது. ஆனால் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் வங்கக்கடலில் புயல் உருவாகி இருப்பதை, தூத்துக்குடிக்கு வரும் கப்பல்களுக்கு அறிவிக்கும் வகையில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் கப்பல்கள் பாதுகாப்பான பகுதிகளில் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.