தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி வாயில் முன்பு மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் அதிக கல்வி கட்டணம் வசூல் செய்ததை எதிர்த்து போராடிய மாணவரை கல்லூரியில் நிரந்தரம் நீக்கம் செய்ததை கண்டித்து கல்லூரி வாயில் முன்பு பாதிக்கப்பட்ட மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் கல்லூரியான காமராஜ் கல்லூரியில் அரசின் உயர் கல்வித்துறை நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி இந்திய மாணவர் சங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தது இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நேசமணி என்ற மாணவரை கல்லூரி நிர்வாகம் நிரந்தர நீக்கம் செய்துள்ளது
இதைத்தொடர்ந்து இன்று கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் காமராஜ் கல்லூரியில் கல்வி கட்டண கொள்ளையை தமிழக அரசு மற்றும் உயர்கல்வித்துறை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் நீக்கம் செய்யப்பட்ட மாணவர் நேசமணியை மீண்டும் கல்லூரியில் சேர்க்க கோரியும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியை அரசு ஏற்று நடத்த வேண்டும் தூத்துக்குடியில் அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவர்கள் பதாகைகளை ஏந்தியபடி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் நேசமணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவரும் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகளில் ஒருவருமான ஸ்ரீநாத், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ்குமார், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் சந்தன செல்வம், ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.