ஜலதோஷத்திற்கு ஆவி பிடித்த நர்சிங் மாணவி திடீர் மரணம்: ‍ போலீஸ் விசாரணை!

ஆத்தூர் அருகே ஜலதோஷம் குணமாக வெந்நீரில் மருந்தை போட்டு ஆவிபிடித்த நர்சிங் கல்லூரி மாணவி திடீரென மயஙகி விழுந்து உயிரிழந்தார்.

ஜலதோஷத்திற்கு ஆவி பிடித்த நர்சிங் மாணவி திடீர் மரணம்: ‍ போலீஸ் விசாரணை!

ஆத்தூர் அருகே ஜலதோஷம் குணமாக வெந்நீரில் மருந்தை போட்டு ஆவிபிடித்த  நர்சிங் கல்லூரி மாணவி திடீரென மயஙகி விழுந்து உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மேலசேர்ந்தபூமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கோமதிநாயகம். இவர் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்தி ஆசிரியை ஆக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் கவுசல்யா (18). இவர் அப்பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களாக ஜலதோஷ பிடித்து இருந்ததால் இன்று காலை வெந்நீரில் மருந்தை போட்டு ஆவி பிடித்துள்ளார். 

அப்போது எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு அப்படியே தனக்கு முன்பு இருந்த சுடு தண்ணீர் பாத்திரத்தில் தலை கவிழ்ந்து விழுந்துள்ளார். ஆவி பிடித்துக் கொண்டிருந்த தன் மகள் திடீரென அசைவற்று கிடப்பதை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு உடனடியாக ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை நடத்திய டாக்டர்கள் கவுசல்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.