ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்தில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” மக்கள் சந்திப்பு, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்தில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” மக்கள் சந்திப்பு, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்தில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” மக்கள் சந்திப்பு, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

     தூத்துக்குடி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக முழுவதும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற மக்களின் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் தொடங்கி வைத்ததை யொட்டி

     அதனடிப்படையில் திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி கவா்னகிாி மற்றும் அகிலாண்டபுரம் ஊராட்சிபகுதியில் உள்ள பூத் 45 47 ஆகிய இரு இடங்களில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” எனும் மக்கள் சந்திப்பு மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது. 

    ஆலோசனை வழங்கி பேசுகையில் ஊராட்சிபகுதிக்குட்பட்ட அனைத்து வாக்காளா்கள் பெயரும் பட்டியலில் முழுமையாக இடம் பெற வேண்டும். வரைவு வாக்காளா் பட்டியல் வௌியிட்ட பின் அதில் பெயா் எதுவும் விடுபட்டிருந்தால் பின்னா் நடைபெறும் சோ்க்கையில் முழுமையாக சோ்த்திட வேண்டும். தமிழக முதலமைச்சரின் கரத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வலுப்படுத்த வேண்டும் மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய பொது மக்களை சந்தித்து மக்களுக்கு நாம் செய்துள்ள திட்டங்களை முழுமையாக எடுத்து சொல்ல வேண்டும். விடியல் பயணம் மகளிர் உரிமைத் தொகை இரண்டாவது கட்டம் இரண்டு தினங்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.

                 விடுபட்ட மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை தகுதியான அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது கல்லூாி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் இரண்டாவது முறையும் திமுக ஆட்சி 7வது முறை அமைய வேண்டும். தமிழகத்தில் எத்தனை அணிகள் களம் இறங்கினாலும் முதன்மையான அணி திமுக தான். இந்த பகுதியில் உள்ள நமது வாக்கு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் 20 நாட்கள் இந்த பணியை நாம் முழுமையாக செய்ய வேண்டும் மக்களை நேரில் சென்று சந்திக்க வேண்டும். என்று பேசினாா். கூட்டத்தில் திமுக நிா்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.