தூத்துக்குடி வானில் திடீர் அதிசயம்..! சுழல் வடிவில் தோன்றிய மர்ம காட்சி – விமான நிலையம் அருகே வியப்பில் பொதுமக்கள்!

தூத்துக்குடி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மாலை சுமார் 4.30 மணி முதல் 40 நிமிடங்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவிய நிலையில், வானில் தோன்றிய ஒரு வித்தியாசமான காட்சி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

தூத்துக்குடி விமான நிலையம் அருகே வானில் சுழல் வடிவில் உருவான மேக அமைப்பு போன்ற ஒன்று திடீரென தென்பட்டது. வழக்கமான மேகத் தோற்றத்திலிருந்து மாறுபட்ட இந்த காட்சி, வானத்தில் சுழன்று கொண்டிருப்பது போல் காணப்பட்டதால் அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் மற்றும் பயத்துடன்  பார்த்தனர்.

பலர் தங்களது செல்போன்களில் அந்த காட்சியை வீடியோ மற்றும் புகைப்படமாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் அந்த காட்சி குறித்த விவாதம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை மாற்றம், காற்றழுத்த வேறுபாடு அல்லது மேக அமைப்பின் தாக்கத்தால் இத்தகைய சுழல் தோற்றங்கள் உருவாகலாம் என கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.

இந்த சூறாவளி காற்றினால் தூத்துக்குடி விமான நிலையத்தில் உள்ள பேரிகேடுகள் மற்றும் தூத்துக்குடி விமான நிலையம் அருகே இருந்த டோல்கேட்டில் உள்ள மேல் குறைகள் அனைத்தும் காற்றில் பறந்து சென்று சேதமாகின.

மழையுடன் இணைந்து வானில் தோன்றிய இந்த அரிய காட்சி, தூத்துக்குடி மக்களிடையே பெரும் வியப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

— Tuty Vision News ????