ஓமனில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் மனைவிக்கு அரசு வேலை! அமைச்சர் ஸ்ரீநாத் பரிந்துரையால் உடனடி நடவடிக்கை!

ஓமனில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் மனைவிக்கு அரசு வேலை! அமைச்சர் ஸ்ரீநாத் பரிந்துரையால் உடனடி நடவடிக்கை!

தூத்துக்குடி குரூஸ் புரத்தை சேர்ந்த மாலுமி நிஷாந்த் என்பவர் ஓமன் கார்மோஸ் கடற்பரப்பில் பணியாற்றியபோது அத்யாவசிய மற்றும் அவசர மருத்துவ உதவிகள் கிடைக்காத காரணத்தால் கப்பலிலேயே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உயிரிழந்தார். அவரது உடல் இதுவரை தமிழகம் வந்து சேராத நிலையில், அவரது மனைவி 

சராபின் தனது பத்து மாத ஆண் குழந்தை மற்றும் மூன்று வயது பெண் குழந்தையுடன் பெரும் துயரத்துடன் வாழ்வாதாரமிழந்து நிற்கதியாய் நிற்பதால் தனக்கு பணி வாய்ப்பு வழங்குமாறு மீன்வளம் (ம) மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ நாத்திடம் ஜூன் 19 ஆம் தேதி 

கோரிக்கை மனு அளித்திருந்தார்.‌ அவரது கோரிக்கை மனு அமைச்சர் ஸ்ரீ நாத்தின் பரிந்துரையின் அடிப்படையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு மனுதாரர் சராபின் குடும்ப வாழ்வாதாரத்தைத் உறுதிபடுத்தும் நோக்கில் கருணை அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஆ.சராபினுக்கு தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம், தூத்துக்குடி மேலாளர் அலுவலகத்தில் வெளிமுகமை நிறுவனம் வழியாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் தற்காலிக இளநிலை உதவியாளர் பணியில் நியமனம் செய்து

தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் க. விஜய கார்த்திகேயன் ஜூன் 20 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார்.