தூத்துக்குடியில் பட்ட பகலில் பயங்கரம்... வழக்கறிஞர் ஓட ஓட வெட்டிக் கொலை!

தூத்துக்குடியில் பட்ட பகலில் வழக்கறிஞர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் பட்ட பகலில் பயங்கரம்... வழக்கறிஞர் ஓட ஓட வெட்டிக் கொலை!

தூத்துக்குடியில் பட்ட பகலில் வழக்கறிஞர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு என்பவரது மகன் முத்துக்குமார் (வயது 43). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நகை கடன் வழங்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இன்று பிற்பகல் 2 மணியளவில் அவர் கடையில் இருந்தபோது 3 பைக்குகளில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அவரை சராமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். 

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. கொலை குறித்து தகவல் அறிந்து சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி (பொ) சத்யராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Also Read.... 
*தூத்துக்குடி மாநகரில் பிப்.23ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!*

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட இறந்த வழக்கறிஞர் முத்துக்குமாருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது சகோதரர் சிவக்குமார் என்பவர் தெற்கு காவல் நிலையம் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் முத்துக்குமார் முதல் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா என்பது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். பட்ட பகலில் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட எஸ்பி அலுவலகம் அருகே வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றம் நிலை வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Also Read... தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு வக்கில் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!*

செய்தியினை விடியோ மற்றும் ஆடியோ வடிவில் அறிந்துகொள்ள...