தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அரசு தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அரசு தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வெள்ளம் பாதித்த பணிகளை அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அவர்கள் இன்று ஆய்வு செய்தார்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வருகை தந்த தமிழக அரசு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா மறவன்மடம் ஊராட்சி அந்தோனியார்புரம் பாலத்தினை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் தூத்துக்குடி மாவட்டம் பைபாஸ் பாலம் அருகில் செங்குளம் ஓடையிலிருந்து உப்பார் ஓடைக்கு செல்லும் மழை நீர் வடிகாலினை, அதிகனமழை காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ்ச்சாலை, எட்டையாபுரம் ரோடு 3ஆம் கேட் மேம்பாலத்திலிருந்தும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.