உடன்குடி தூய்மைப் பணியாளர் தற்கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியான முன்னாள் பேரூராட்சி தலைவி சரன்!
உடன்குடி தூய்மை பணியாளர் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆயிஷா கல்லாசி திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
உடன்குடி தூய்மை பணியாளர் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆயிஷா கல்லாசி திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடி பேரூராட்சி தூய்மை பணியாளர் சுடலை மாடன் (54). என்பவரை ஜாதி பெயரைக் கூறிய திட்டியதில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹிமைரா ரமீஸ் பாத்திமா, மாமியார் ஆயிஷா கல்லாசி, கணவர் அசாப் செயல் அலுவலர் பாபு ஆகியோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் உடன்குடி முன்னாள் பேரூராட்சி தலைவரும் தற்போதைய தலைவரின் மாமியாருமான ஆயிஷா கல்லாசி திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் போலீஸ் பாதுகாப்புடன் குலசேகரப்பட்டணம் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார் அங்கு இன்ஸ்பெக்டர் ரகுராஜன் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.