பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது பிரதமர் மோடியை விமர்சனம் செய்ததற்காக சக பயணியர் ஒருவரை பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி "உன்னை தூக்கி விடுவேன். நான் ரயில்வே ஆலோசகர் உறுப்பினர்" என மிரட்டியுள்ளார். சகித்துக் கொள்ள முடியாமல் தமிழ்நாடு தீண்டாமை இருக்கும் முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ், நாராயணன் திருப்பதியை தட்டி கேட்டுள்ளார். அதனால் காவல்துறை மூலமாக ரயிலில் இருந்து சாமுவேல்ராஜை கட்டாயப்படுத்தி இறக்கி உள்ளனர்.
அத்துமீறி நடந்து கொண்ட ரயில்வே போலீசார் மீதும், சக பயணிகளை மிரட்டிய பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியை கண்டித்து தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் காசி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் சுரேஷ், இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் கார்த்திக், ததீஒமு மாவட்ட பொருளாளர் வயணப்பெருமாள், மாவட்ட இணை செயலாளர் முத்து, மாவட்ட துணைத் தலைவர் தர்மர் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர். மாவட்டச் செயலாளர் சக்திவேல் முருகன் நிறைவுரையாற்றினார்.