தூத்துக்குடி: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு – செல்வநாயகபுரத்தில் நிரந்தர சுகாதார வளாகம் விரைவில்

தூத்துக்குடி: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு – செல்வநாயகபுரத்தில் நிரந்தர சுகாதார வளாகம் விரைவில்

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக சுகாதார வளாகங்களை அகற்றி, நிரந்தர சுகாதார வளாக கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, செல்வநாயகபுரம் பகுதியில் மக்களின் கோரிக்கையை முன்னிறுத்தி, அங்கு செயல்பட்டு வந்த தற்காலிக சுகாதார வளாகத்தை அகற்றி, அதன் அருகில் புதிய நிரந்தர சுகாதார வளாக கட்டிடம் அமைப்பதற்கான இடத்தை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது வட்டக் கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு. ரவீந்திரன், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர். விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என தெரிவித்தார்.