தூத்துக்குடி ரோச் பூங்கா பகுதியில் அரிவாளுடன் திரிந்த 3 பேர் கைது!

தூத்துக்குடி ரோச் பூங்கா பகுதியில் பைக்கில் அரிவாளுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி தென்பாகம் போலீசார் தெற்கு பீச் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரோச் பூங்கா அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது, அவர்கள் மோட்டார் சைக்கிளில் அரிவாள் இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். 

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பூபாலராயர்புரத்தை சேர்ந்த டார்ஜன் (வயது 26), தெற்கு ராஜாதெருவை சேர்ந்த சலேத் (24) மற்றும் எஸ்.எஸ்.மாணிக்க புரத்தை சேர்ந்த அரவிந் (24) என்பதும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.