தூத்துக்குடியில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்!

தூத்துக்குடியில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றனது.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நடைமேடை எண் 1ல் இருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் நேற்று மாலை புறப்பட்டது. இந்த ரயில் பார்சல் ஆபீஸ் வரை சென்று பின்பக்க கார்டு பெட்டியில் கப்ளிங் இணைப்பு பெயிலியர் ஆனதால் திரும்ப மீண்டும் நடைமேடைக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் ரயில்வே ஊழியர்கள் வந்து கப்ளிங் இணைப்பை சரி செய்த பின் சுமார் 48 நிமிடங்கள் தாமதமாக 9.28 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் ஒரு மணி நேரம் ரயில் தாமதமானது. பயணிகள் சிரமம் அடைந்தனர்.