திருச்செந்தூர் கோவில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.28 லட்சம் வருமானம்!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள அன்னதான உண்டியல் மூலம் ரூ.28 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள அன்னதான உண்டியல் மூலம் ரூ.28 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் அதன் உப கோவிலான திருச்செந்தூர் சிவன் கோவில், நாசரேத் கோவில், கிருஷ்ணாபுரம் கோவில் போன்றவற்றில் உள்ள அன்னதானம் திட்ட உண்டியல்கள் மட்டும் கடந்த 2 நாட்களாக எண்ணப்பட்டன. கோவில் இணை ஆணையர் கார்த்திக் தலைமையில் ஆய்வாளர் செந்தில்நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் மற்றும் தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப் பணிக்குழு, கோவில் பணியாளர்கள் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் ரூ.28,23,641 கிடைத்துள்ளது.
+++++++++++++++++++++++++++++++
தூத்துக்குடி மாவட்ட உள்ளூர் செய்திகள் முதல் உலகம் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News, Thoothukudi news,), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் டூட்டி விஷன் நியூஸ் (www.tutyvision.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Whatsapp Group: Click Here...