தூத்துக்குடி மாவட்டத்தில் 40 எஸ்ஐகள் பணியிட மாற்றம்: எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 40 போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டு உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் 40 பேரிடம் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்தார். இதில், அவர்களின் விருப்பத்தின் பேரில் பணியிட மாறுதல் அளித்து மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி நாரைக்கிணறு பாஸ்கரன், ஆத்தூருக்கும், கோவில்பட்டி கிழக்கு எஸ்.சிவராஜா, சிப்காட்டுக்கும், தாளமுத்துநகர் ஆதிலிங்கம் நாரைகிணறுக்கும், வடபாகம் பிரமராஜ், குரும்பூருக்கும், நாசரேத் ரவிச்சந்திரன் ஸ்ரீவைகுண்டத்துக்கும், முத்தையாபுரம் ஈசுவரமூர்த்தி செய்துங்கநல்லூருக்கும், தென்பாகம் சேட்டைநாதன் புதியம்புத்தூருக்கும், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் பஞ்சவர்ணம் விளாத்திகுளத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி தென்பாகம் அங்குத்தாய், கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவுக்கும், மாசார்பட்டி முருகதாஸ் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கும், சங்கரலிங்கபுரம் சுகந்தி, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், விளாத்திகுளம் துரைசாமி, கழுகுமலைக்கும், கோவில்பட்டி மேற்கு முருகன், விளாத்திகுளத்துக்கும், கழுகுமலை விநாயகம் காடல்குடிக்கும், புதுக்கோட்டை ராமகிருஷ்ணன், தெர்மல்நகருக்கும்,
ஓட்டப்பிடாரம் குருசாமி, கயத்தாருக்கும், புதியம்புத்தூர் மாணிக்கராஜ், தென்பாகத்துக்கும், திருச்செந்தூர் கோவில் முத்துகிருஷ்ணன் தருவைகுளத்துக்கும், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலை அருள்மொழி, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்துக்கும், காடல்குடி சுப்பாராஜ், மணியாச்சிக்கும், மணியாச்சி வீரபாண்டியன், விளாத்திகுளத்துக்கும், சாயர்புரம் முருகன் மத்திய குற்றப்பிரிவுக்கும், குளத்தூர் மாரியப்பன் கொப்பம்பட்டிக்கும்,
தென்பாகம் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ், கயத்தாருக்கும், ஆறுமுகநேரி சுகுமார், நாலாட்டின்புதூருக்கும், ஆறுமுகநேரி அரிக்கண்ணன் மத்தியபாகத்துக்கும், புதியம்புத்தூர் இசக்கியப்பன், மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கும், விளாத்திகுளம் திருமலை கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்துக்கும், விளாத்திகுளம் சுந்தர்ராஜ் ஆறுமுகநேரிக்கும், குலசேகரன்பட்டினம் மேரி, திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசுக்கும்,
மணியாச்சி குமார் ஆத்தூருக்கும், மத்திய குற்றப்பிரிவு ராமகிருஷ்ணன் ஆறுமுகநேரிக்கும், மத்தியபாகம் வாசுதேவன் ஆறுமுகநேரிக்கும், தருவைகுளம் முத்துமாலை தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கும், விளாத்திகுளம் முனியசாமி, தருவைகுளத்துக்கும், சாத்தான்குளம் நாகராஜன் ஆழ்வார் திருநகரிக்கும், முத்தையாபுரம் சுந்தரம், ஆத்தூருக்கும், சிப்காட் சிவக்குமார் தூத்துக்குடி வடபாகத்துக்கும், கொப்பம்பட்டி ரமேஷ் முத்தையாபுரத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
---------------------------------------------------------
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள...
WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE
WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE