தூத்துக்குடி மாணவி கொலை – POCSO வழக்கில் புதிய முன்னேற்றம்! யார் இந்த சிறப்பு வழக்கறிஞர்?

தூத்துக்குடி மாணவி கொலை – POCSO வழக்கில் புதிய முன்னேற்றம்! யார் இந்த சிறப்பு வழக்கறிஞர்?

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில், பிளஸ் 2 மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை நடத்துவதற்காகச் சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமித்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில காலத்திற்கு முன்பு வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாகக் குளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து (குற்ற எண்: 11B/2026), சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் (போக்சோ - POCSO) சட்டம் 2012-ன் பிரிவு 32(1)-ன் கீழ், இந்த வழக்கைச் சிறப்பு நீதிமன்றத்தில் திறம்பட நடத்துவதற்காகச் சிறப்பு அரசு வழக்கறிஞரைத் தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையைச் சேர்ந்த எல்லம்மாள் கிஸ்ஸிங்கர் அவர்கள் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசாணை வெளியீடு: தமிழக ஆளுநரின் பரிந்துரையின் பேரில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசகன் இதற்கான அரசாணையைப் பிறப்பித்துள்ளார். நியமிக்கப்பட்டுள்ள எல்லம்மாள் கிஸ்ஸிங்கர், தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றத்தில் இந்தத் துயரமான கொலை வழக்கை அரசுத் தரப்பில் முன்னின்று நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.