ஸ்டெதஸ்கோப் வடிவில் நின்று அசத்திய நர்சிங் கல்லூரி மாணவிகள்!!

கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரி சார்பில் நடைபெற்ற உலக செவிலியர் தின விழாவில் ஸ்டெதஸ்கோப் வடிவில் நின்று நர்சிங் கல்லூரி மாணவிகள் அசத்தினர்.

கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர்  கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி உலக செவிலியர் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டு கை விளக்கு ஏந்திய காரிகை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர் ஸ்டெதஸ்கோப் வடிவில் நின்று அசத்தினர். பிணியாளர்களுக்கு முதலுதவிகள் செய்வது குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தார். முதல்வர் சாந்தி பிரியா,ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பயிற்றுனர் மாலினி வரவேற்றார்.நர்சிங் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி பயிற்றுநர்கள் ஸ்ரீரங்கம்மாள், செல்வி, வினோதா, தேவி நர்சிங் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி தபஸ்வினி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை மாணவி கீர்த்தனா தொகுத்து வழங்கினார்.