தூத்துக்குடியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் அனுசரிப்பு..!
தூத்துக்குடியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் அனுசரிப்பு..!
தூத்துக்குடியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் அனுசரிப்பு..!
தேசப் பிதா மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழா 30.01.2023 அனறு; தூத்துக்குடி அரசு செவிலியர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில வைத்து ;நடைபெற்றது. இவ்விழா மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அஜய் சீனிவாசன்அவர்கள் தலைமையில் நடைபெற்றது. துர்த்துக்குடி துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்) டாக்டர். யமுனா வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதில் தூத்துக்குடி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர்.பொற்செல்வன், தூத்துக்குடி சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் கற்பகம், தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர்.சிவகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (குடும்ப நலம்) மரு.பொன் இசக்கி, தூத்துக்குடி துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்), மரு.சுந்தரலிங்கம், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணை முதல்வர் கலைவாணி, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவர் மரு.சைலஸ் ஜெயமணி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தோல் நோய் துறைத் தலைவர் மரு.ததேயூஸ் மற்றும் மரு. சந்தியா வதனா. மரு.தனலட்சுமி , மரு.செந்தில் செல்வன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அஜய் சீனிவாசன் அவர்கள் விழா பேருரை நிகழ்த்தி தொழுநோய் பாதிக்கப்பட்ட நபர்களை கௌரவப்படுத்தினார். மேலும் ஸ்பர்ஷ் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. தூத்துக்குடி அரசு செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவிகள் கலந்துக் கொண்ட தொழுநோய் விழிப்புணர்வு பேரணி பள்ளியிலிருந்து புறப்பட்டு தெற்கு காவல் நிலையம் வழியாக அரசு மருத்துமனை வந்தடைந்தது. பேரணியை மாவட்டவருவாய் அலுவலர் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட நலக்கல்வியாளர் திரு.முத்துக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி நன்றியுரை நிகழ்த்தினார். விழா ஏற்பாடுகளை துணை இயக்குநர்மருத்துவப்பணிகள் (தொழுநோய்) மற்றும் அனைத்துப் பணியாளாக் ளும்செய்திருந்தனர்.