பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாத்திட வாட்ஸ்அப் எண் அறிமுகம்!!

பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாத்திட வாட்ஸ்அப் எண் அறிமுகம்!!

பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாத்திட வாட்ஸ்அப் எண் அறிமுகம்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாத்திட வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அமைச்சர் கீதாஜீவன் உத்தரவின் பேரில், சமூகத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண் குழந்தைகள், மாணவியர்களை பாதுகாத்திடும் நோக்கத்தில் வாட்ஸ்அப் எண் 6374810811 தொடங்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் தங்களுக்கு எதிரான குற்றச்செயல்கள்( ம) பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்களை 24 மணி நேரமும் பதிவு செய்யலாம்.

புகார் தொடர்பாள விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் தங்களுக்கு எதிரான குற்றச்செயல்கன், குழந்தை திருமணம் தடுத்தல், பள்ளி கல்வியில் இடைநிற்றலை தடுத்து தொடர்ந்து கல்வி பயில்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தல் என அனைத்து குற்ற நிகழ்வுகளையும் இந்த எண்ணில் பதிந்து உடனடியாக தீர்வு காணலாம் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எல் .அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.