ஒட்டப்பிடாரம், கயத்தாறில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

ஒட்டப்பிடாரம், கயத்தாறு யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒட்டப்பிடாரம், கயத்தாறில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

ஒட்டப்பிடாரம், கயத்தாறு யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ரூ.7,500 வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். இதில் சத்துணவு சங்க மாவட்ட செயலாளர் செல்லத்துரை கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்ட பொருளாளர் சுப்பையா, வட்டார பொருளாளர் வளர்மதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் கோவில்பட்டி வட்ட செயலாளர் பாஸ்கரன், வட்டார செயலாளர் ஆனந்தன் உள்பட சத்துணவு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அதேபோல் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகம் முன்பு நடைபெற்ற‌ ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் கோகிலா தலைமை தாங்கினார். ஞானமணி கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் பிரீமென், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் அன்பு செல்வன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயபாக்கியம், மாவட்டத் துணைத் தலைவர் பாத்திமா ராணி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் பொன்னரசி, வட்டாரப் பொருளாளர் ஆண்டாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.