போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் வெளியீடு

போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் வெளியீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள்கள் நடமாட்டம் தொடா்பாக பொதுமக்கள் புகாா்கள் தெரிவிப்பதற்காக வாட்ஸ்ஆப் எண் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மது மற்றும் போதைப் பொருள்களின் நடமாட்டத்தைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக போதைப் பொருள்கள் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில், தொலைபேசி எண், வாட்ஸ் ஆப் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மற்றும் மாவட்ட காவல்துறையின் வாட்ஸ் ஆப் எண்கள் 83000 14567, 95141 44100 ஆகிய எண்களில் போதைப் பொருள்கள் நடமாட்டம் குறித்த தகவல்களைத் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவா்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

----------------------------------------------------------------

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள‌...

WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE

WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL CLICK HERE :-

GOOGLE NEWS LINK :- CLICK HERE