திருச்செந்தூர் கடற்கரையில் கபடி விளையாடி மகளிர் தினவிழா கொண்டாடிய பெண்கள்!

திருச்செந்தூர் கோவில் கடற்கரை வளாகத்தில் பெண்கள் கபடி விளையாடி உலக மகளிர் தினத்தை கொண்டாடினர்.

திருச்செந்தூர் கடற்கரையில் கபடி விளையாடி மகளிர் தினவிழா கொண்டாடிய பெண்கள்!

திருச்செந்தூர் கோவில் கடற்கரை வளாகத்தில் பெண்கள் கபடி விளையாடி உலக மகளிர் தினத்தை கொண்டாடினர். 

பிரசித்திபெற்ற திருச்செந்தூர் கோவில் கடற்கரை வளாகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நிறத்தில் சேலைகள் அணிந்தும் கபடி, கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுக்களை விளையாடினர். 

தாங்கள் எதற்கும் பயந்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் 25 வயது முதல் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வயது வித்தியாசமின்றி ஆண்களுக்கு நிகரானவர்கள் என்ற வகையில் விளையாட்டுகளை விளையாடி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து கேக் வெட்டி மகளிர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்த காட்சியினை கடற்கரை வளாகத்தில் அமர்ந்து இருந்தோர் இடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.