உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடி மாற்றம்; 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் இடமாற்றம்- விவரம்

உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடி மாற்றம்; 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் இடமாற்றம்- விவரம்

தமிழ்நாடு முழுவதும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடியாக மாற்றப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணனும் மாற்றப்பட்டுள்ளார். 

ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

பள்ளிக் கல்வித் துறை செயலாளராக, சிட்கோ இயக்குநர் மதுமதி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தகவல் தொழிநுட்பத் துறைச் செயலாளராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம், ராணிப்பேட்டை, அரியலூர் ஆட்சியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தின்போது ஆட்சியராக இருந்த ஷர்வன் குமார் ஜடாவத், நகர்ப்புற மேம்பாட்டு வாரிய இணை செயலாலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள் துறை இயக்குநராக இருந்த சந்திரலேகா ஐஏஎஸ், ராணிப்பேட்டை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி ஆட்சியர் அருணா ஐஏஎஸ், புதுக்கோட்டை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். லட்சுமி பவ்யா ஐஏஎஸ் நீலகிரி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.