முத்தையாபுரம் அருகே மனைவியை அடித்து கொன்று விட்டு நாடகமாடிய கனவன் கைது..!

முத்தையாபுரம் அருகே மனைவியை அடித்து கொன்று விட்டு நாடகமாடிய கனவன் கைது..!

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய கணவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம், நேருஜி நகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 37). கூலி தொழிலாளி. இவருக்கும் தாளமுத்துநகரை சேர்ந்த முத்துமாரி (வயது 32) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக உயிருக்கு ஆபத்தான நிலையில் முத்துமாரியை கருப்பசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். 

ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முத்துமாரி  உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்தனர். எனினும் முத்தையாபுரம் போலீஸ் இண்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே முத்துமாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் முத்துமாரியின் உடலில் பல்வேறு இடங்ளில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கருப்பசாமியை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

முத்துமாரியை அவரது கணவர் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலை செய்ததாக நாடகம் ஆடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்றதாக கருப்பசாமி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கொலை வழக்குப் பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர்.