தூத்துக்குடியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் – 2 வாலிபர்கள் கைது | வடபாகம் போலீசார் அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் – 2 வாலிபர்கள் கைது | வடபாகம் போலீசார் அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆவுடையப்பன் தலைமையில், சார்பு ஆய்வாளர் மகராஜன் மற்றும் போலீசார் இன்று (16.02.2026) தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பு அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்திப் போலீசார் சோதனை செய்தனர்.

அந்த சோதனையில், வண்டியில் வந்தவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபஸ்டின் (25) மற்றும் ஜெய் ஆனந்த் (21) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் விற்பனைக்காகத் தங்களது இருசக்கர வாகனத்தில் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, மேற்கண்ட இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன