“தூத்துக்குடி அடல் லேப் பள்ளிகளில் ‘ஷெல் நெக்ஸ்ப்ளோரர்ஸ்’ எனர்ஜி கிளப் தொடக்கம் – 6 பள்ளிகள் தேர்வு

“தூத்துக்குடி அடல் லேப் பள்ளிகளில் ‘ஷெல் நெக்ஸ்ப்ளோரர்ஸ்’ எனர்ஜி கிளப் தொடக்கம் – 6 பள்ளிகள் தேர்வு


தூத்துக்குடி மாவட்டத்தில் அடல் லேப் பள்ளிகளில் ஷெல் நெக்ஸ்ப்ளோரர்ஸ் எனர்ஜி கிளப் துவக்க விழா

லெர்னிங் லிங்க்ஸ் ஃபவுண்டேஷன் (LLF), அடல் இனோவேஷன் மிஷன் (AIM), நீதி ஆயோக் மற்றும் ஷெல் நிறுவனங்களுடன்   இணைந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்க பட்ட 6 அடல் டிங்கரிங் லேப் (ATL) பள்ளிகளில் எனர்ஜி கிளப் துவக்க விழாவானது காணொளி காட்சி மூலமாக 22.01.2026, வியாழக்கிழமை   நடைபெற்றது.அடல் இனோவேஷன் மிஷன் (AIM), நீதி ஆயோக் மிஷன் டைரக்டர் திரு. தீபக் பக்லா துவக்க விழாவில் காணொளி வாயிலாக லெர்னிங் லிங்க்ஸ் ஃபவுண்டேஷன் (LLF) தலைவர் திருமதி அஞ்சலி பிரகாஷ், ஷெல் நிறுவன CSR தலைவர் திருமதி நேஹா என். சௌஹான் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய ஆசிரியர்கள்  மாணவமாணவிகள் மற்றும் லெர்னிங் லிங்க்ஸ் ஃபவுண்டேஷன் குழுவினர்  கலந்துகொண்டனர் .

2024-25 ம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட இந்த திட்டத்தில் முதற்கட்டமாக  இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த 20 அடல் லேப் பள்ளிகள் தேர்ந்தெடுக்க பட்டு எனர்ஜி கிளப் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2 வது கட்டமாக இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த  75 அடல் லேப் பள்ளிகள் தேர்ந்தெடுக்க பட்டு எனர்ஜி கிளப் துவங்கபட்டுள்ளது.

2024–25 ஆம் ஆண்டில் அறிமுகமான எனர்ஜி கிளப் திட்டம், மாணவர்கள் தன்னிறைவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் முன்னிலை வகிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டது. இதன் இரண்டாம் கட்டத்தில், இந்தியா முழுவதும் உள்ள 75 அடல் லேப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அதில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து ஆறு பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் சுமார் 11 பயிற்சி பெற்ற ஷெல் நெக்ஸ்ப்ளோரர்ஸ் மாணவர்கள், எரிசக்தி மற்றும் நீர் சேமிப்பு முயற்சிகளை முன்னெடுத்து, பள்ளி மற்றும் உள்ளூர் சமூகங்களில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை பரப்ப உள்ளனர்.


துவக்கவிழா ஏற்பாடுகளை சிறப்பாக லெர்னிங் லிங்க்ஸ் ஃபவுண்டேஷன் குழுவினர் செய்திருந்தனர்