தூத்துக்குடியில் கொலை செய்வதற்காக ஆயுதங்களுடன் திரிந்த 3பேர் கைது..!

தூத்துக்குடியில் ஒருவரை கொலை செய்வதற்காக வாளுடன் திரிந்த 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு 8 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பாளை., ரோடு மையவாடி பஸ் ஸ்டாப் அருகில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்து அவரிடமிருந்து சுமார் 4 அடிநீளம் உள்ள ஒரு வாள் இருந்தது.
இதையடுத்து 3பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் தூத்துக்குடி பெருமாள் தெருவைச் சேர்ந்த பாண்டித்துரை மகன் கிங்சன் (23), சோட்டையன் தோப்பு பாரதி நகரை சேர்ந்த சுனைராஜ் மகன் மதன்குமார் (31), அண்ணா நகர் 6வது தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கண்ணன் (41) என்று தெரியவந்தது.
மேலும் இவர்கள் மூவரும் தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டிக் கொண்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3பேரையும் கைது செய்து வாளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.