தூத்துக்குடியில் தனியார் பொருட்காட்சியில் நியூஸ் பேப்பரில் உணவு பொருட்கள் விற்பனை!!

தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட ரோச் பூங்கா பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் பொருட்கட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் டைனோசர்கள், சிங்கம், யானை, புலி உள்ளிட்ட வன விலங்குகளின் உருவம் வடிவமைக்கபட்டு சிறப்பாக அமைக்கபட்டுள்ள்து. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடக்கூடிய ஜியன்ட் வீல், ஃப்லோட்டிங் கப்பல், சிறுவர், சிறுமியர்களுக்கான போட்டிங் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
நியூஸ் பேப்பரில் உணவு பொருட்கள் விற்பனை
மேலும் இங்கு வரக்கூடிய குழந்தைகள் , மற்றும் பெரியவர்கள் வாங்கி சாப்பிடுவதற்காக உணவு கூடங்கள் அமைக்க பட்டுள்ளது. இந்த கடைகளில் வழங்கப்படக்கூடிய காலி ப்ளவர், டில்லி அப்பளம், உருளைக்கிழங்கு ரோல் ஆகியவற்றை அரசு உத்தரவை பொருட்படுத்தாமல் நியூஸ் பேப்பரில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதாரமற்ற நீரில் குழந்தைகள் விளையாட்டு
அதேபோல் பொருட்காட்சியில் அமைக்கபட்டுள்ள குழந்தகளுக்கான போட்டிங் செய்யும் தண்ணீர் மிகவும் மோசமான நிலையில் , குப்பைகள் கொட்டி கிடந்தது. எனவே மேற்படி பொருட்காட்சியில் உள்ள கடைகள் மற்றும் அங்குள்ள குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களை தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.